தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவகத்தில் அமர்ந்து உண்ட வாடிக்கையாளர்கள் -  உணவகத்துக்குச் சீல் வைத்து நடவடிக்கை - Trichy news

திருச்சி: வாடிக்கையாளர்களை உள்ளே அமர்ந்து உணவருந்த அனுமதித்த உணவகத்திற்குச் சீல் வைக்கப்பட்டது.

ஹோட்டலுக்கு சீல் வைத்து நடவடிக்கை
ஹோட்டலுக்கு சீல் வைத்து நடவடிக்கை

By

Published : May 4, 2020, 2:00 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கால், பல நிறுவனங்கள் மூடப்பட்டும்; போக்குவரத்து இயங்காமலும் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

உணவகத்தில் அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்கள்

அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட உணவகங்களில், பொட்டலங்களில் மட்டும் உணவு விற்பனை செய்ய அனுமதி அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டிருந்தார்.

வாடிக்கையாளர்கள் உணவகங்களின் உள்ளே அமர்ந்து உணவருந்த அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மேலபுலிவார்டு சாலையில் உள்ள கற்பகம் உணவகத்தில், வாடிக்கையாளர்களை உள்ளே அமர்த்தி, சாப்பாடு பரிமாறுவதாகப் புகார் வந்தது.

புகாரைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில், அலுவலர்கள் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாடிக்கையாளர்கள் உணவகத்தின் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அலுவலர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க:ஏரியில் மீன் பிடித்தவர்கள் காவல்துறையினரை கண்டு தப்பி ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details