துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை, வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது கியாவுல் ஹக் என்ற பயணி, 13.81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 361 கிராம் தங்கத்தை தனது உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதே போல் மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த ரியாஸ்கான் என்ற பயணி, 447.5 கிராம் தங்கத்தை தனது உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அவர் உள்ளாடை, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.17.10 லட்சமாகும்.