திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டிதுரை(43) என்பவர் ரூ.7.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 199.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதேபோல் இலங்கையிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர கிருஷ்ணன்(38) என்பவர் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 184.5 கிராம் கடத்தல் தங்கத்தையும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிஜாமுதீன்(32) என்பவர் ரூ.11.96 லட்சம் மதிப்புள்ள 397 கிராம் தங்கத்தையும் கடத்திவந்திருப்பது தெரியவந்தது.