திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்தனர்.
பசை வடிவில் தங்கம்.. விமான நிலைய அதிகாரிகள் ஷாக்! - air india flight
திருச்சி விமான நிலையத்தில் 21 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பசை வடிவில் தங்கம்.. விமான நிலைய அதிகாரிகள் ஷாக்!
அப்போது ஆண் பயணி ஒருவர் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட பசை வடிவிலான 24 கேரட் 404 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 21 லட்சத்து 23 ஆயிரத்து 828 ரூபாய் ஆகும்.