துபாயிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.
துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த இளைஞர் கைது! - smuggling
திருச்சி: சார்ஜரில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த இளைஞரை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தங்கம் பறிமுதல்
அந்தச் சோதனையின்போது சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வைத்திருந்த மடிக்கணினி சார்ஜர் சற்று வித்தியாசமாக இருப்பதைக் கண்ட அலுவலர்கள் சந்தேகமடைந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த சார்ஜரை சோதித்துப் பார்த்ததில் சுமார் 175 கிராம் தங்கத்தை அவர் அதில் மறைத்து வைத்து கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த அலுவலர்கள் அவரிடமிருந்த 5.64 லட்சம் மதிக்கத்தக்க தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.