திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருவாய்த்துறை சார்பில், சிறப்பு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி விராலிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். மேலும் மணப்பாறை வட்டாட்சியர் லஜபதிராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், மண்டல துணை வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.