ராமநாதபுரம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் இருதரப்பினருக்கு இடைய தகராறு ஏற்பட்டது. இதில் முன்விரோதம் காரணமாக அருண் பிரகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரத்தைச் சேர்ந்த லெப்ட் சேக், சதாம், அஜீஸ், காசிம் ரஹ்மான் ஆகிய நான்கு பேர் திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 2) சரணடைந்தனர்.