திருச்சி: சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 54 பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி மணிகண்டம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 4 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.