தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு -  உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்! - fire service cow rescue issue

திருச்சி : கிணற்றில் விழுந்த பசு மாட்டை விரைந்து செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

fire service cow rescue issue

By

Published : Nov 5, 2019, 11:37 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தவிட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டின் பின்புறத்திலுள்ள வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஒரு பசு மாடு மட்டும், அருகிலிருந்த 40 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

விரைந்து செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறை

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் ஐந்து அடி தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை அக்கம் பக்கத்தினர் உதவியோடு மீட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பசுவை உயிரோடு மீட்ட, தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:

லஞ்ச வழக்கில் சர்வேயர் கைது!

ABOUT THE AUTHOR

...view details