திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் இந்த விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
விமானங்களில் பயணம்செய்வதற்கு எந்த நாட்டிலிருந்து பயணம்செய்ய இருக்கிறார்களோ, அந்த நாட்டு அரசின் சார்பில், 'பயணம்செய்பவருக்கு கரோனா தொற்று அறிகுறி இல்லை' எனச் சான்றிதழ் பெற்ற பின்பே விமானத்தில் பயணம்செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (பிப். 7) சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம்செய்தனர். 'கரோனா தொற்று அறிகுறி உள்ளது' எனச் சான்றிதழுடன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் பயணம்செய்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமானத்தில்அனுமதி அளித்தது தெரியவந்தது.