தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை! - manaparai

திருச்சி அருகே விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை!
மணப்பாறை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

By

Published : Oct 4, 2022, 10:35 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில், மாண்பூண்டி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பபேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் இறந்து கிடந்த நபரை பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது மேல் சட்டை பையில் ரூ.800 பணமும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது. அதனைத் தொடர்ந்து துண்டு சீட்டில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அந்த அலைபேசி எண் இறந்து கிடந்த நபரின் அண்ணனுடையது என்பதும், இறந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் கீழகோத்திராப்பட்டியைச் சேர்ந்த விவசாயி, ரவி பாஸ்கர் (42) என்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த பூச்சிக்கொல்லி மருந்து குடுவையை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நண்பனைத் தாக்கி மரணம் ஏற்படுத்தியவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை சிறைத்தண்டனையாக குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details