தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்.21ல் தாலி அறுக்கும் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு - farmer protest at seppakkam

திருச்சி: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 21ஆம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

farmer-ayyakannu

By

Published : Oct 18, 2019, 2:10 PM IST

இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், 18.09.2019 அன்று டெல்லி உச்ச நீதிமன்றம் சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பு அணை கட்ட வேண்டும்.

அய்யாக்கண்ணு போராட்டம் அறிவிப்பு

காவிரியில் வெள்ளம் வரும்பொழுது வீணாக கடலில் கலக்கும் நீரை வெள்ளநீர் கால்வாய் வெட்டி வறண்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வருகின்ற அக்டோபர் 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல் போன்ற பல்வேறு வடிவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இந்த போராட்டத்தில் பெண்கள் தாலியை அறுத்து கையில் ஏந்திக்கொண்டு போராடுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க:நெருங்கும் தீபாவளி - சென்னை முக்கிய வீதியில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள்!

ABOUT THE AUTHOR

...view details