திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் சிவசாமி மற்றும் சஞ்சய் ஆகிய இரண்டு மாணவர்களும் பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர்கள் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மயாமான மாணவர்களைத் தேடினர்.
இந்நிலையில், இரண்டு மாணவர்களும் பள்ளி முடிந்தவுடன் மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து பழனி பேருந்தில் ஏறிச் சென்றதாக சக மாணவர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவர் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கலுக்கு விரைந்த காவல் துறையினர், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்ற இரு மாணவர்களையும் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.