தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேஸ்புக் தோழியின் அழைப்பு - நம்பி சென்ற இளைஞரின் இருசக்கர வாகனம் பறிப்பு!

கடலூர்: பேஸ்புக் தோழியின் அழைப்பை நம்பி சென்ற இளைஞரின் இருசக்கர வாகனம் பறிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

By

Published : Sep 8, 2020, 8:57 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது மகன் வினோத்குமார் (31).

இவர், பண்ருட்டியில் பேனர் அச்சடிக்கும் தொழில்செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருச்சி காஜாமலையை சேர்ந்த 20 வயது இளம்பெண் நண்பரானார்.

வினோத் குமாரிடம் பழகி வந்த அப்பெண் நேரில் பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வினோத்குமார் திருச்சி வந்துள்ளார்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் பெண்ணுக்காக காத்திருந்த வினோத்குமாரை, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

பின் அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி.தெருவில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து ஒரு லட்சம் ரூபாய் கேட்டு அடித்து மிரட்டியுள்ளனர்.

ஆனால் என்னிடம் பணம் இல்லையென்று வினோத்குமார் கூறியதால் அந்த கும்பலானது வினோத்குமாரின் மோட்டார் சைக்கிளை பறித்துவிட்டு விடுவித்தனர்.

இதுகுறித்து அவர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.

இந்த விசாரணையில், திருச்சி மதுரை ரோடுவள்ளுவர் தெருவை சேர்ந்த ஆசீக் என்ற நிவாஷ் (26), திருச்சி பாலக்கரைகீழபடையாச்சி தெருவை சேர்ந்தமுகமது யாசர் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைதான இருவரும் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் கூட்டாளிகள் ஆவார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் பெண் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 11 பேர் கைது - காவல்துறை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details