தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2019, 1:13 PM IST

ETV Bharat / state

திருச்சியில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெறும் பிரமாண்ட கண்காட்சி 14இல் தொடக்கம்

திருச்சி: ஐந்து லட்சம் புத்தகங்கள் இடம்பெறும் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி வரும் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை நடைபெறும் என கண்காட்சி அமைப்பாளர் ரவிசங்கர் தெரிவித்திருக்கிறார்.

exhibition-featuring-5-lakh-books-in-trichy-on-14th-sep

இது தொடர்பாக திருச்சி செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய புத்தக கண்காட்சி அமைப்பாளர் ரவிசங்கர், திருச்சி கிரீன் ரோட்டரி கிளப் சார்பில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெறுகிறது என்றார். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம் என்றும் இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம் எனவும் தெரிவித்தார்.

புத்தகக் கண்காட்சி அமைப்பு குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு

கண்காட்சியில் மொத்தம் 60 புத்தக மையங்கள் இடம் பெறுவதாகவும், சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். புத்தகங்களுக்கு நியாயமான தள்ளுபடி வழங்கப்படும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்ளுக்கு சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கண்காட்சி நடைபெறும் 10 நாட்களும் பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும், கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details