தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறு - நடிகர் ராஜ்கிரண் மனைவி, வளர்ப்பு மகளிடம் விசாரணை

குடும்பத் தகராறு காரணமாக நடிகர் ராஜ்கிரணின் மனைவி, வளர்ப்பு மகளிடம் முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 2, 2022, 10:46 PM IST

திருச்சி துறையூரைச் சேர்ந்தவர், இளங்கோவன். வணிகவரித்துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரது முன்னாள் மனைவி பத்மஜோதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பத்மஜோதி கணவர் இளங்கோவனை விட்டு பிரிந்து சென்னை சென்றார். அங்கு நடிகர் ராஜ்கிரணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து பத்மஜோதி கதீஜா என்று அழைக்கப்பட்டார். மகள் பிரியா, ஜீனத்பிரியா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜீனத்பிரியா திரைப்படம் மற்றும் டிவி சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து ராஜ்கிரண் தனது வளர்ப்பு மகளை, தனது பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது எனவும்; அவர் எனது வளர்ப்பு மகள் இல்லை எனவும் அறிவித்தார்.

இதையடுத்து ஜீனத்பிரியா, தனது கணவர் முனீஸ்ராஜுடன் தனது முதல் தந்தை இளங்கோவிடம் துறையூரில் தஞ்சமடைந்தனர். தற்போது துறையூரில் இளங்கோவனுடன் ஜீனத்பிரியா மற்றும் முனீஸ்ராஜ் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜ்கிரண் மற்றும் தாய் கதீஜா ஆகியோர் குறித்து மகள் ஜீனத் பிரியா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கதீஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

சென்னை காவல் ஆணையர் புகாரை திருச்சி போலீஸ் எஸ்.பி. வழியாக முசிறி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காவேரி முன்னிலையில் நேற்று விசாரணை செய்தார். விசாரணைக்கு ஜீனத்பிரியா தரப்பினர் மட்டுமே ஆஜரான நிலையில் இன்று (டிச.02) இரு தரப்பும் ஆஜராகும்படி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவிட்டார்.

டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த ராஜ்கிரண் மனைவி, மற்றும் அவரது வளர்ப்பு மகள்

உத்தரவின்பேரில் இன்று இரு தரப்பினரும் டிஎஸ்பி யாஸ்மின் முன்னிலையில் ஆஜரான நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இருதரப்பினரும் சமூக வலைதளங்கள் வழியாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வீடியோ, ஆடியோ வெளியிடக்கூடாது என்றும்; இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்படுமாயின் காவல் துறை மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் காவல் துறையினரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டுச்சென்றனர்.

இதையும் படிங்க:ஈ.பி.எஸ். குறித்து கருத்து வெளியிட அறப்போர் இயக்கத்திற்கு இடைக்காலத்தடை

ABOUT THE AUTHOR

...view details