திருச்சி:உலகை அச்சுறுத்தும் கரோனா இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர் எனப் பலரும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பெரும்பணியாற்றியுள்ளனர்.
மேலும் கரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 1,427 மருத்துவர்களும், தமிழ்நாட்டில் 42 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கரோனா தொற்றால் நோயாளிகள் உயிரிழக்கும்போது, மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
மருத்துவர்களின் கோரிக்கை:
- மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவமனை, மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
- மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
- மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பிணையில் வரமுடியாதவாறு கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்.
- தாக்குவோர் மீது 15 நாட்களில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம்: