தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - DMK alliance parties protest

திருச்சி : திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

k.n nehru
k.n nehru

By

Published : Sep 28, 2020, 6:48 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக, அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details