தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎல்-II ஆலையை கண்டித்து தேமுதொச உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி : தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனம் அலகு-2 இல் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dmdk_protest against tnpl -II  in trichy
dmdk_protest against tnpl -II in trichy

By

Published : Feb 4, 2021, 5:19 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனம் அலகு-2 இல் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருகமணி நீரேற்று நிலையத்தில் கடந்த ஐந்து வருடமாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பதினான்கு பேரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேலை விட்டு நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை நிறுத்த வேண்டும், அங்கு தவறு செய்த ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதொச உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் மாநில துணைத்தலைவர் பொன். இளங்கோவன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் ஆகியோர் தலைமை வகித்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிஎன்பிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பேரவையில் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details