அதிமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
அதிமுக அரசின் வழியை பின்பற்றுவோம்: தேமுதிக வேட்பாளர் - இளங்கோவன்
திருச்சி: பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆளும் அதிமுக அரசின் வழியை பின்பற்றுவோம் என திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அவருக்கு தேமுதிகவினர், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் என்னை வேட்பாளராக அறிவித்தார். அந்த மகிழ்ச்சியை விட தற்போது திருச்சி மாநகரம் சார்பில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி முன்னேற்றத்தை முன்னிறுத்தி நிச்சயமாக பிரச்சாரத்தை மேற்கொள்வேன். ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த அரசாங்கத்தின் வழியை நாங்கள் பின்பற்றுவோம் என அவர் தெரிவித்தார்.