திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தப்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தேவகவுடாவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் தேவகவுடா சாமி தரிசனம் - SriRangam Renganathar temple
திருச்சி: முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
devagowda
பின்னர் மூலவர் ரங்கநாதர், தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவும் உடன் வந்திருந்தார். தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஹேமநாதன், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி, கோட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வரவேற்பு அளித்தனர்.