தமிழ்நாட்டில்நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை மணப்பாறை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே காவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும் - தம்பிதுரை பேச்சு! - காவிரி நீர்
திருச்சி: பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே கர்நாடகவிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும் என தேர்தல் பரப்புரையின்போது கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசியுள்ளார்.
அப்போது பேசுகையில், "பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்குகாவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும். அதற்காகதான் அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் காங்கிரஸ் கிடையாது. ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா என்ற சந்தேகம் காங்கரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ராகுல் பிரதமரானால், இதெல்லாம் செய்யப்படும் எனக் கூறி வருகின்றனர். சூரியனில் கை வைத்தால், கை வெந்துப்போகும். இந்த தேர்தலில் சூரியனும், கையும் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள், கை தேராது" எனப் பேசினார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜோதிமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.