உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலிண்டர் நிறுவனத்திற்கு பணம் கொடுக்காததால் ஆக்சிஜன் சப்ளை செய்யவில்லை என்று அந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிய கபில்கான் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கபில்கான் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்த காரணத்தால் கபில்கான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.