தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவு - ஊழியர்கள் உண்ணாநிலை - ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருச்சி: விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

staffs-conducting-hunger-strike

By

Published : Sep 25, 2019, 12:11 PM IST

லாபத்தில் இயங்கும் பல்வேறு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே அகமதாபாத், ஜெய்பூர், கவுகாத்தி, லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 11 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலைய அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று தொடர் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது.

அமைப்பின் தலைவர் யுவ ராஜேஷ் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

போராட்டத்திற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுவ ராஜேஷ், லாபத்தில் இயங்கிவரும் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. இரண்டாம்கட்டமாக தனியார்மயமாக்கப்படும் 11 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையமும் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டித்து கறுப்புப் பட்டை அணிந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்து ஆர்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டம் உள்பட பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

மூன்று நாட்கள் இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் உள்ள தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதையும் படிங்க...

18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details