திருச்சி விமானநிலையத்தில்வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகை கடத்தல் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது கைது நடவடிக்கைகளும், பறிமுதலும் நடக்கின்றன. அந்த வகையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று (ஜனவரி 28) அதிகாலை திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். அப்போது விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடையே சோதனையில் ஈடுபட்டனர்.