திருச்சி: துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் சுறுசுறுப்பு ஒருபுறம் இருக்கும் சூழ்நிலையில், மறுபுறம் கரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வகையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வகையில் இன்று(ஏப்ரல் 1) திருச்சி மாவட்டம், துறையூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இந்திரா காந்திக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.