திருச்சி கடைவீதிகளில் உள்ள ஜவுளிக்கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கடைவீதிகள் அடங்கியுள்ள 16,17,18 ஆகிய வார்டுகளில் உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு (10ம் தேதி) 8 மணி முதல் வருகிற 24ஆம் தேதி இரவு 12 மணி வரை பெரிய கடைவீதி கமான் வளைவு முதல் கள்ளத் தெரு வரை, மேலபுலிவார்டு ரோடு கிழக்கு ஜாபர்ஷா தெரு முதல் பாஸ்போர்ட் அலுவலகம் வரையிலான பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் குடியிருப்போருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான சிறு மளிகை, மெடிக்கல், பால், காய்கறி கடை தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றாளர்களை மீண்டும் பரிசோதிக்காமல் வீட்டிற்கு அனுப்புவது ஏன் ? - திமுக எம்எல்ஏ கேள்வி