தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி அருகே 6 யானைகளுக்கு கரோனா பரிசோதனை - யானைகள்

திருச்சி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, எம்.ஆர். பாளையத்தில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆறு யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கால்நடை மருத்துவர் சுகுமார்.
யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கால்நடை மருத்துவர் சுகுமார்.

By

Published : Jun 12, 2021, 12:04 PM IST

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள, பல்வேறு விலங்குகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விலங்குகளிடமிருந்து கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை வனத் துறை மருத்துவர்கள் சேகரித்துவருகின்றனர்.

யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கால்நடை மருத்துவர் சுகுமார்

இதேபோன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமீலா ஆகிய ஆறு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இந்த ஆறு யானைகளிடமிருந்தும், கால்நடை மருத்துவர் சுகுமார் இன்று (ஜூன் 12) கரோனா மாதிரிகளைச் சேகரித்தார்.

இதையும் படிங்க: ’யானை வலசை பாதைகள் சூழ் இடங்கள் தனியார் காடாக அறிவிப்பு’ - இதற்கான முக்கியத்துவம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details