தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி வந்த பயணிகளுக்கு கொரோனா? - திருச்சி வந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ்

திருச்சி: மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த 11 மாதக் குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

By

Published : Mar 4, 2020, 5:21 PM IST

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது மூன்று பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் திருச்சி விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ற 11 மாதக் குழந்தை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தா் ராஜன், சேலத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த கொரோனா வைரஸ் நோய்க்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களைத் தாக்கியிருப்பது கொரோனா வைரஸா? அல்லது வேறு ஏதும் வைரஸா? என்பதை கண்டறிவதற்காக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details