தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கூட்டுறவுத் துறை காலியிடங்களை விரைவில் நிரப்புங்கள்..!' - ஊழியர்கள் கோரிக்கை - ஊழியர்கள் சங்கம்

திருச்சி: "கூட்டுறவுத் துறையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்" என்று, சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

'கூட்டுறவுத் துறை காலியிடங்களை விரைவில் நிரப்புங்கள்

By

Published : Jul 20, 2019, 8:00 PM IST

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் திருச்சியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையானது விவசாயிகளுக்கு வேளாண்மை கடன்களையும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கக்கூடிய அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

தற்போது எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஏனென்றால் கூட்டுறவுத் துறையில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனை கூட்டுறவுத்துறை பயிற்சி நிலையங்களில் இருந்து விரைவில் நிரப்ப வேண்டும். சுருக்கெழுத்து தட்டசருக்கு நிலை மூன்றுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கால நீட்டிப்பு ஆணை வர தாமதம் ஏற்படுவதால் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. அடிப்படை விதி 127 இன் கீழ் உரிய பணி நீட்டிப்பு ஆணையினை வழங்க கூட்டுறவுச் சங்க பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை!!

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சலீம் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details