அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்ட நிர்வாக குழு சார்பில் ராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைவேந்தர் சூரப்பாவை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி: சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைவேந்தர் சூரப்பாவை நீக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
அப்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.