திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்கால், குடமுருட்டி உள்ளிட்ட வாய்க்கால்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணை நிரம்பும் சூழ்நிலையில் உள்ளது. அதனால் மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் திருச்சிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.
உள்ளூர் மழை வெள்ளம் மற்றும் மேட்டூர் அணை நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திறந்து வைத்தார்.
இதையடுத்து ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, " கர்நாடகா, கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.