திருச்சி: ஶ்ரீரங்கம் தொகுதி குழுமணி பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டிற்கு 2 சமூகத்தினர் சாலையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்பொழுது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள் கட்டையால் தாக்கி கொண்டுள்ளனர்.
இதில் ஒரு தரப்பினரில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மறு தரப்பில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது சாதி பிரச்னையாக உருவெடுத்ததற்கு காரணமாக இருந்த காத்தமுத்து என்பவரை கைது செய்யக் கூறி பொதுமக்கள் தற்பொழுது சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால், 2 தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.