சுலோவாக்கியா நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பேரா செஸ் விளையாட்டு போட்டிகள், ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜெனிதா கலந்துக் கொண்டார். இவர் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
'கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்..!' - தங்கமங்கை ஜெனிதா - physically challenged
திருச்சி: "ஆசிய கிராணட் ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்" என்று, மாற்றுத்திறனாளிக்களுக்கான உலக பேரா செஸ் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை ஜெனிதா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெனிதா விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதன் பின் அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பலர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து, மாலை, சால்வை அணிவித்தும், கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ஜெனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "19ஆவது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர் வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர். இந்தியாவில் இருந்து ஐந்து பேர் கலந்து கொண்டனர். இதில் பெண் பிரிவு செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இது நான் பெறும் 6வது தங்கப்பதக்கம். இதற்காக பயிற்சியாளர் சுந்தரராஜன், எனது பெற்றோர், குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அனைத்து செஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்" என்றார்.