தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருப்பசாமி கோயிலை இடித்த விவகாரம்: நடிகர் விமல் மீது புகார்

திருச்சி: மணப்பாறையில் கோயிலை இடித்து சேதப்படுத்தியதாக நடிகர் விமல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

case against actor vimal for demolished temple near manapparai
case against actor vimal for demolished temple near manapparai

By

Published : Jan 20, 2021, 10:04 AM IST

Updated : Jan 20, 2021, 11:40 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு தெற்கு மந்தை என்னும் இடத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில், அப்பகுதி மக்கள் மூன்று தலைமுறையாக வழிபட்டு வந்துள்ளனர். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் விமல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இடிக்கப்பட்ட கோயில்

இதன் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனிடையே கடந்த போகி பண்டிகையன்று கோயிலில் இருந்த வேல் மற்றும் விளக்கை எடுத்துச் சென்றதாக நடிகர் விமல் ஆதரவாளர்கள் மீது கோயில் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

கருப்புசாமி கோயில்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் நடிகர் விமல், அவரது ஆதரவாளர்கள் பெரியதம்பி, சக்திவேல், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் ஜேசிபி இயந்திரம் மூலம் கருப்பசாமி கோயில் கட்டடத்தை இடித்து விட்டதாக கூறி, கோயல் பூசாரி செல்வம் நேற்று (ஜன. 19) மீண்டும் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலை பணிக்காக கோயில் இடிப்பு: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Last Updated : Jan 20, 2021, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details