தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு! - செயின் பறிப்பு

திருச்சி: மணப்பாறையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம்  அடையாளம் தெரியாத நபர்கள் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bike-auucest

By

Published : May 19, 2019, 12:31 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி சாலையில் ஸ்வீட் ஸ்டால் நடத்திவருகிறார். இவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக, அவரது மனைவி சிவசங்கரி உணவு எடுத்துக்கொண்டு நேற்று மதியம் கடைக்கு வந்துள்ளார்.

உணவை கொடுத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிவசங்கரியை அடையாளம் தெரியாத இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளனர். அண்ணா நகர் பகுதி அருகே வந்தபோது அவர்கள் இருவரும் திடீரென சிவசங்கரியின் கழுத்திலிருந்த ஆறு பவுன் தாலி சங்கிலியை பறித்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் பைக்கில் மறைந்துள்ளனர்.

இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் சிவசங்கரி கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திகேயன் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details