தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

KGF பட பாணியில் போலீசாருக்கு மிரட்டல்... கைது செய்த சில மணிநேரத்தில் ஜாமீன்... கதறும் காவல் துறை! - குற்றவாளிக்கு ஜாமீன்

கேஜிஎஃப் திரைப்பட பாணியில் காவல் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்த நிலையிலும் அவர் ஜாமீனில் வெளிவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KGF பட பானியில் போலீசாருக்கு மிரட்டல்.
KGF பட பானியில் போலீசாருக்கு மிரட்டல்.

By

Published : May 18, 2022, 10:44 PM IST

திருச்சி: ராம்ஜி நகரைச் சேர்ந்த ஒருவரை ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்ஜி நகர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், சிறையில் அடைக்கப்பட்டவரின் ஆதரவாளரான சமயபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (30) என்பவர், ‘ராம்ஜி நகர் காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்; கேஜிஎஃப் திரைப்படம் போல் காவல் நிலையம் தகர்த்து எறியப்படும்’ என வாட்ஸ்ஆப்பில் ராம்ஜி நகர் காவல் துறையினரை அச்சுறுத்தும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனையறிந்த சமயபுரம் காவல் துறையினர் சுரேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்து, அவர் மீது அச்சுறுத்தல் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியநிலையில் அவர் ஜாமீனில் அப்போதே விடுவிக்கப்பட்டார்.

இதனால் வேதனையடைந்த சமயபுரம் காவல் துறையினர் இது குறித்து கூறியதாவது, “ராம்ஜி நகர் காவல் துறையினர் ஒரு வழக்கில் தொடர்புடைய நபரை பிடித்து உரிய விசாரணை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு சமயபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் கதாநாயகன் காவல் நிலையத்தை ராட்சத துப்பாக்கியால் சுட்டு தரைமட்டமாக்கும் காட்சியைப்போல் ராம்ஜி நகர் காவல் நிலையம் தகர்க்கப்படும் என அச்சுறுத்தும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டிருந்தார்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

இதனையறிந்த காவல் துறையினர் அவரை கைது செய்து உரிய ஆதாரத்துடன் உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். ஆனால், நீதிபதி வாட்ஸ்அப்பில் தானே பதிவிட்டார். இதனை ஒரு குற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி சொந்த ஜாமீனில் வெளிட்டார். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.

இதுவே ஒரு வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு ஒரு நபர், இதேபோல் நீதிமன்ற வளாகம் தகர்க்கப்படும் என பகிரங்கமாக வாட்ஸ்அப்பில் பதிவிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என கேள்வி எழுகிறது.

குற்றம் செய்யும் நபரை பிடிக்க காவல் துறையினர் முன்வருகிறார்கள் என்றால் அவரை தண்டிக்க நீதிபதிகளும் முன்வர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை’ என்றார்கள் வேதனையுடன்.

இதையும் படிங்க:காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை; திண்டுக்கல் அருகே பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details