தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - காவல் துறை விசாரணை - Trichy crime news

திருச்சி: மணப்பாறை பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By

Published : Feb 27, 2021, 12:37 PM IST

மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வருபவர் கருப்பையா. இவரின் ஒன்றரை வயது குழந்தை ஹன்சிகா நேற்று முன்தினம் (பிப்.25) இரவு திடீரென தொடர்ச்சியாக அழுதுள்ளது.

இதனால் குழந்தையை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் குழந்தை நேற்று (பிப் 26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மர்மமான முறையில் 3 வயது குழந்தை உயிரிழப்பு..

ABOUT THE AUTHOR

...view details