திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதால் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பின்னரும் விவசாயிகளை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. நீர் மேலாண்மைத் திட்டத்தில் வளமாக இருக்கும் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைவாக உள்ளது. அதனால் இங்கும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சேர்க்க வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு குறித்து பேசிய அரசு, தற்போது அது குறித்து பேசமறுப்பதற்கு காரணமே மரபணு மாற்றப்பட்ட விதைகள்தான். வெங்காயத்திற்கு உரிய விலை வேண்டும், அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.