திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செவலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், முனியம்மாள், தமிழரசன், சத்தியபாரதி உள்ளிட்டோர் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பயணிகள் ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற ஆட்டோ திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவில் சாலையை கடக்க முற்பட்டது.
ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு - 5 பேர் படுகாயம் - accident
திருச்சி: மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக பயணிகள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செவலூரைச் சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். விபத்தில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மக்கள் மீட்டு திருச்சி பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு பேர் காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.