தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அடாவடி" திமுக ஆளுங்கட்சியானால் என்னவாகும் - ஓ.பி.எஸ் கேள்வி - ops

திருச்சி: அடாவடித்தனமாக செயல்படும் திமுக, ஆளுங்கட்சியாக பொறுப்பெற்றால் என்னவாகும் என மணப்பாறையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தம்பிதுரைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட ஓ.பி.எலஸ்

By

Published : Mar 29, 2019, 5:16 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவா், "நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள். நீங்கள் மனது வைத்தால் தான் வெற்றி வாய்ப்பு சூட முடியும் என்ற நிலையில், இந்த தேர்தலை சரியாக எடை போட வேண்டும். தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தர்மத்தின் பக்கம் அதிமுக கூட்டணி ஒரு அணியாகவும், அடாவடி கட்சிகளான திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும் உள்ளது. இலங்கையில் தொப்புள்கொடி உறவுகள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது திமுக-காங்கிரஸ் கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதனையடுத்து இலங்கைக்கு பார்வையிட சென்ற திமுக தலைமையிலான குழு ராஜபக்சே அளித்த விருந்தில் பங்கேற்றனர். திமுக ஆட்சியில் தனிநபர் சொத்துக்களை மிரட்டி வாங்கியதை மறுபடியும் திரும்ப ஒப்படைத்தவர் ஜெயலலிதா. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அடாவடித்தனமாக இருக்கிறது என்றால் ஆளுங்கட்சியாக வந்தால் என்ன ஆகும் " என கேள்வி எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details