கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார். அவர் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகள் நேரத்தில் கடந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்று, இந்தியா முழுவதிலும் தங்க மங்கையாக பிரபலம் அடைந்தார்.
ஊக்கமருந்து செய்தி வதந்தி - கோமதி மாரிமுத்துவின் சகோதரர்
திருச்சி: ஊக்கமருந்து சோதனையில் கோமதி தோல்வியடைந்ததாக வரும் செய்தி வதந்தி என்று கோமதி மாரிமுத்துவின் அண்ணன் சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் ஆனதாகவும், அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் 4 ஆண்டுகால தடையும், தங்கப்பதக்கம் பறிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். இது குறித்து பேசிய கோமதி மாரிமுத்து, தான் அதுபோன்ற ஊக்க மருந்துகளை தனது வாழ்நாளில் எப்போதும் பயன்படுத்தியதில்லை என மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கோமதியின் அண்ணன் சுப்பிரமணியன் கூறுகையில், 'எனது தங்கை கோமதி ஊக்க மருந்து உட்கொண்டதாக கூறுவது வதந்தி. எந்த தவறும் செய்யவில்லை என்பதை கோமதி உறுதியாக என்னிடம் தெரிவித்தார். மேலும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று அவர் குறிப்பிட்டார்.