ஸ்ரீரங்கத்தில் உள்ள விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியின் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவல் துறை உதவி ஆய்வாளர் அனுராதா கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணியாக சாதனையை படைத்தது, தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டியாலா பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி எடுத்தபோது கிடைத்த நம்பிக்கையால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது வெகு தூரத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்கு உருவாகியுள்ளது.