திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் அரசு பணிகளை டெண்டர் எடுத்து வேலை செய்து வருகிறார்.அதன்படி புத்தாநத்தத்தில் புதிய போர்வெல் மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைப்பது தொடர்பாக 4 லட்சத்திற்கு வேலை செய்ததற்கான பில்லை உறுதிப்படுத்தி ஏற்றுக்கொள்ள ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனை அணுகியுள்ளார்.
அதற்கு 6 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று வெகட்ராமன் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது இஸ்மாயில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.