மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ விமானங்கள் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இதில் பயணம் செய்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது இளையான்குடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரைச் சேர்ந்த முகமது ரியாஸ், புதுக்கோட்டையைச் சேர்ந்த சாபுபரலி ஆகியோர் ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.