தமிழ்நாடு

tamil nadu

வரிசையில் நின்று உணவு வாங்குவதில் வாக்குவாதம்.. வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் அடிதடி மோதல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 1:58 PM IST

Trichy Advocates clash: வழக்கறிஞர் சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில், வரிசையில் நின்று உணவு வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறிய நிலையில் வக்கீல்களுக்குள் கடும் சண்டை ஏற்பட்டு அந்த இடமே கலவர பூமியாக காட்சி அளித்தது.

திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் அடிதடி மோதல்
திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் அடிதடி மோதல்

திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் அடிதடி மோதல்

திருச்சி:குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் 46வது ஆண்டு விழா நேற்று (செப்.8) மத்திய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சீனிவாச மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சரிவர செய்யப்பட்டிருந்த நிலையில், சிக்கன் பிரியாணி, தால்சா, சிக்கன் கிரேவி உள்ளிட்ட உணவு ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டு இருந்தது. பின்னர் சிறப்பு விருந்தினர்களின் வருகையைத் தொடர்ந்து ஆண்டு விழா கூட்டமானது நடைபெறத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேசத் தொடங்கினார்.

அப்போது விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் ‘நேரமாகிறது சாப்பாடு போடுங்க’ என்று கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று உணவுகளை வாங்கி பஃபே சிஸ்டத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமாக இருந்ததால் சாப்பாடு இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்படத் தொடங்கியதால சொல்லப்படுகிறது.

இதை கவனித்த வக்கீல் சங்கத்தின் பொருளாளர் கிஷோர் குமார், நேரடியாக களத்தில் இறங்கி உணவுகளை வரிசையில் நின்று வாங்குமாறு கூட்டத்தை நெறிமுறைப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது சிவகுமார் என்ற ஜூனியர் வக்கீல், திடீரென வரிசையில் புகுந்து சாப்பாடு வாங்க முன்னேறியதாக சொல்லப்படுகிறது.

இதை கவனித்த கிஷோர் குமார், வரிசையில் நின்று வாங்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இதை தொடர்ந்து, வக்கீல்களுக்குள் கட்டுப்படானது இழக்கப்பட்டு காரசாரகமான விவாதமும், அடுத்தடுத்து கைகலப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து வக்கீல்கள், அங்கு அமர்ந்து சாப்பிட போடப்பட்டிருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் தூக்கி சினிமா பாணியில் எறிந்தனர்.

ஒரு கட்டத்தில், ஒருவர் மீது ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் சம்பவமும் நடந்ததுள்ளது. அதில் குற்றவியல் வக்கீல் சங்கத்தின் பொருளாளர் கிஷோர் குமார் மீது சாம்பார் வாளியானது கவிழ்க்கப்பட்டு, உடல் முழுவதும் சாம்பாராக இருந்தது. இதையடுத்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த சங்கத்தின் செயலாளர் வெங்கட், கிஷோரை தாக்கிய வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இப்படியாக 30 நிமிடங்களுக்கும் மேலாக வக்கீல்கள் ஒருவர் மீது ஒருவர் தாக்குவதும், அடிப்பதும் என விழா நடந்த அரங்குக்கு அருகே இருந்த உணவு கூடத்தில் பெரும் பரபரப்பும், கலவரமும் ஏற்பட்டது. இத்தகைய கலவரம் அங்கு அரங்கேறிக் கொண்டு இருந்த நிலையில் அதை தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கைப் பாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து போலீசாரிடம் இதுகுறித்து கேட்ட நிலையில், "அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். நாம் சென்று கேட்டால் நம்மை எதிர் கேள்வி கேட்பார்கள்" என பதில் அளித்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:LIVE: G20 Summit : ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்! உலக தலைவர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details