திருச்சி:திருச்சியில், ‘தொழில் நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில் முனை திறன் பயிற்சி துவக்க விழா’ நேற்று (அக்.21) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, இந்தியாவின் முதல் சூரிய மின் சக்தி திட்டமான ஆதித்யா L1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கலந்து கொண்டார்.
இவ்விழாவில், 30 பசுமை சார்ந்த மற்றும் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறு குறு தொழில்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்த 30 தொழில் முனைவோர்களும், 3 மேலாண்மை மற்றும் தொழில்முனைவு துறை சார் நிபுணத்துவம் உடைய நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், TREC-STEP (Tiruchirapalli Regional Engineering College Science and Technology Entrepreneurs Park) திறன் பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.பி.ஜவகர், தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜ ரத்தினம், உதவி பொது மேலாளர் பிந்து பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “விண்வெளியில் மனிதனை அனுப்புவதற்கான சோதனையின் ஒரு பகுதிதான் ககன்யான் திட்டம். ராக்கெட்டில் செல்லும்போது விண்வெளியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், எவ்வாறு தப்பித்து மீண்டும் பாதுகாப்பான முறையில் பூமி வந்தடைவது என்பது குறித்து சோதனை நடைபெற்றது.