திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (27). இவருக்கும் திருச்சி முள்ளிக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி (24) என்பவருக்கும் கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், மணமகள் வீட்டிலிருந்து புது தம்பதியர் மற்றும் ரமணியின் சகோதரருமான ரஞ்சித் (23) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மாந்துரை நோக்கி சென்றனர். வாகனத்தை ரஞ்சித் ஓட்டினார்.
திருச்சி அரசு மருத்துவமனை அப்போது வாளாடி, சிவன்கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மோகன், ரஞ்சித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரமணி படுகாயமடைந்தார்.
தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் ஆன இரண்டே நாட்களில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் இரு குடும்பத்தார் மத்தியிலும், கிராம மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.