தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா! - festival

Strange Worship: திருச்சி முசிறி அருகே உள்ள அச்சப்பன் கோயில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு திருவிழா நடைபெற்றது.

திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா
திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 10:40 PM IST

திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா

திருச்சி: முசிறி தாலுகா வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோயிலில், ஆண்டு தோறும் ஆயுத பூஜைக்கு மறுநாளான விஜயதசமி அன்று பெண்களைச் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு விஜயதசமியான இன்று (அக்.24) நடைபெற்ற விழாவில், திரளான பெண்கள் பங்கேற்றனர். இந்த விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரன், மதுரைவீரன், வெடிகார குள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்குப் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும், கோயில் வளாகத்தைச் சுற்றிலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் கோயிலிலிருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் வாண வேடிக்கையுடன், அருகிலிருந்த காட்டுக் கோயிலுக்குச் சுமந்து சென்றனர். அப்போது கோயிலைச் சேர்ந்த சேர்வைக்காரர்கள், பூசாரிகள் தப்பு அடித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகப் பக்தர்கள் தலையில் தேங்காய்களும் உடைக்கப்பட்டது.

அந்த சமயத்தில், காட்டுக் கோயில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடிகளை அவிழ்த்து, கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கோயில் பூசாரி பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள், கோயிலுக்குச் சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்தும், விபூதி பிரசாதம் வாங்கியும் சென்றனர்.

இந்த அச்சப்பன் கோயிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி, சூனியம், பேய் பிடித்தல் ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டிக் கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில், இந்த வினோத வழிபாடு திருவிழாவை பார்வையிட, திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் வருகை புரிந்தனர்.

இதையும் படிங்க:ஒடிசா கேபினட் அமைச்சரான தமிழக அதிகாரி... யார் இந்த வி.கே.பாண்டியன்! ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசியல்வாதி!

ABOUT THE AUTHOR

...view details