தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா! - ஒழியாத பிற்போக்கு பழக்கவழக்கங்கள்

திருச்சி: முசிறி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நடைபெற்றது. இது முற்போக்கு சிந்தனைவாதிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

a bizarre festival of chasing women with a whip in trichy

By

Published : Oct 9, 2019, 2:56 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோயிலில் மதுரை வீரன், அகோர வீரபத்திரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து, பரிவாரங்களுடன் அச்சப்பன் சாமி காட்டுக் கோயிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண தடை, சூனியம், பேய் பிடித்திருப்பது அகல ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் அவிழ்ந்த கூந்தலோடு உயர்த்திய கைகளுடன் மண்டியிட்டு பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கினர். இதுபோன்ற மூடப்பழக்கவழக்கங்களை மக்களிடமிருந்து அப்புறப்படுத்த சமூக செயற்பாட்டாளர்களும் முற்போக்கு சிந்தனைவாதிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்திதான் வருகின்றனர். இருப்பினும் இது ஒழிந்தபாடில்லை!

பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா

இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் முசிறி அருகே உள்ள ஊரக்கரை ஒட்டயப்பன் கோயிலிலும் பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details